தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டு வெடிகுண்டு புழக்கம் அதிகரிப்பு; தஞ்சையில் போலீஸ் ரெய்டில் ஆயுதங்கள் பறிமுதல்! - Today Thanjavur news

நாட்டு வெடிகுண்டு புழகத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பல்வேறு ரவுடிகளின் வீடுகளில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு
நாட்டு வெடிகுண்டு

By

Published : Jan 22, 2023, 9:56 AM IST

நாட்டு வெடிகுண்டு

திருவிடைமருதூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டாரத்தில் நாட்டு வெடுகுண்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவின் படி திருவிடைமருதூர் உட்கோட்ட டி.எஸ்.பி ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை வேட்டையில் ஈடுபட்டனர்.

பல்வேறு பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், சைக்கிள் பால்ரஸ் குண்டுகள், ஆணி மற்றும் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

சரியான நேரத்தில் கிடைத்த தகவலால் போலீசார் நடத்திய சோதனையில் பெரும் சதித்திட்டங்கள் தகர்க்கப்பட்டன. மேலும் தலைமறைவான ரவுடிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறெங்கும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; எந்த கூட்டணியில் யார் யார்?

ABOUT THE AUTHOR

...view details