தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டு சாணத்தை வீசியும் சென்றனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வல்லம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீதாராமன், திருவள்ளுவர் சிலையினைப் பார்வையிட்டார். அதையடுத்து திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்து மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவள்ளுவர் சிலை மீது அவமரியாதை செய்த நபர்களை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.