தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிட வளாகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. கரோனா பரவுதலைத் தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் நடைபெறவேண்டிய இந்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகக் கடந்த சில மாதங்களாக நடைப்பெற்றுவருகிறது.
இதில் கலந்துகொண்ட விவசாயிகள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது விவசாயிகளின் நலன் கருதி வழங்கிய, நெல் சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டங்களை தற்போதைய அரசு முன்னாள் முதலமைச்சரின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறி அவர் வழங்கிய சிறப்புத் தொகுப்பு திட்டத்தினை நிறுத்தியுள்ளது. இந்த திட்டத்தினை உடனே வழங்கவேண்டும்.
திருவையாறு வேளாண்மை உள்கோட்டத்தில் பிரதமர் கௌரவ நிதி உதவித்திட்டம் முறைகேட்டில் நிலமே இல்லாமல் இரண்டு தவணை தொகை பெற்றவரில் வங்கி கணக்கு மூலம் வசூல் செய்யப்பட்டது என்று வேளாண்மை துறை கூறியும், இதுவரையில் முறைகேடு செய்தவரின் பெயர் நீக்காமலேயே பிரதமர் கிசான் திட்ட பட்டியலில் உள்ளது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.