தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தை அபகரிக்க முயற்சி: சசிகலாவின் சகோதரருக்கு பிடிவாரண்ட்

தஞ்சாவூர்: நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் உள்பட 11 பேர் மீது திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மனோகரன், வளர்மதி தம்பதி
மனோகரன், வளர்மதி தம்பதி

By

Published : Sep 24, 2020, 8:09 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மனோகரன், வளர்மதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மனோகரன் தஞ்சை தெற்குவீதி பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் அம்மன்பேட்டை அருகே 4.84 ஏக்கர் பரப்பில் நிலம் வாங்கி பண்ணை தோட்டம் அமைத்துள்ளார்.

மனோகரன், வளர்மதி தம்பதி

இந்த இடத்தை விலைக்குக் கேட்டு சசிகலாவின் சகோதரரும், டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் தொடர்ந்து தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார். இதனால் மனோகரன், ராஜா டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜிடம் இடத்தை 65 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி 15 லட்சம் ரூபாய் முன்தொகை பெற்றுள்ளார்.

குறிப்பாக மனோகரன் அசல் பத்திரங்களையும் முருகராஜிடம் கொடுத்துள்ளார். பின்னர் சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம், டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜையும் மிரட்டி அவரிடம் இருந்த பத்திரத்தை பறித்துள்ளார்.

தன்னுடைய நிலத்தை விற்கவிடாமல் சுந்தரவதனம் தொந்தரவு செய்வதால் மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் மனோகரன் 2015 அக்டோபர் 6 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். இதுகுறித்து திருவையாறு நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுந்தரவதனம், ராஜேஸ்வரன், முருகராஜ் உள்பட 11 பேர் மீது திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: நில ஆக்கிரமிப்பு பிரச்னையில் தீக்குளித்த விவசாயி மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details