திருக்காட்டுப்பள்ளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் பயணம் செய்வது நான்கு மாதங்களாக குறைந்திருந்தது. இச்சூழலில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயணங்களுக்கான முழு ஊரடங்கு தளர்வு உத்தரவை அரசு வெளியிட்டது.
திருக்காட்டுப்பள்ளி கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் - traffic jam
தஞ்சாவூர்: ஊரடங்கு தளர்வு காரணமாக திருக்காட்டுப்பள்ளியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் காலை முதலே பொதுமக்கள் தங்களது வாகனங்களில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஒரே நேரத்தில் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏதோ பொங்கல் தீபாவளிக்கு வந்து செல்பவர்கள் போல பொதுமக்கள் எவ்வித முகக்கவசம் அணியாமலும், எப்பொழுதும் வருவதுபோல் வாகனங்களில் பயணம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வேளையில் நாளை (செப்.1) முதல் பொது போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில், இன்னும் அதிகமாகக் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உரிய போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென்றும், முகக்கவசம் அணிந்து தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்கள் கூறியுள்ளனர்.