தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'40 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட சக்தியில்லை' - கே.பி.முனுசாமி - எங்களுக்கு சக்தி

தஞ்சை: "ஜெயலலிதா அளவிற்கு 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு எங்களுக்கு சக்தி கிடையாது" என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி

By

Published : Feb 17, 2019, 7:32 PM IST

கே.பி.முனுசாமி
தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக. சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறியதாவது, "ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு தான் பேட்டியளிக்கிறார். முதலில் அவர் மக்களை சந்திக்கட்டும். நாங்கள் மக்களோடு இருக்கிறோம். அதனால் அவரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

எதிரிகள் எப்போதும் இருப்பார்கள். துரோகிகள் இந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடுவார்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கழக நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவெடுக்கும். ஜெயலலிதா அளவிற்கு 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு எங்களுக்கு சக்தி கிடையாது.

பாஜகவை தமிழகத்திற்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவரின் செல்வாக்கால் தான் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று காங்கிரசுக்கு எதிராக ஆட்சி அமைக்க முடிந்தது. ஸ்டாலினை மக்கள் கேள்வி கேட்டதால், தனது கட்சி தொண்டர்களை கிராமசபை கூட்டங்களுக்கு அனுப்புகிறார், என்று விமர்சித்தார்.

ABOUT THE AUTHOR

...view details