தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை இல்லாதவர்களின் எண்ணம் புரட்சியை ஏற்படுத்தும் - பெ. மணியரசன்

தஞ்சாவூர்: படித்துவிட்டு வேலை இல்லாத மக்களின் மனதிலுள்ள எண்ணங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

பெ. மணியரசன் பேட்டி

By

Published : Jul 27, 2019, 4:23 PM IST

இது குறித்து அவர் கூறுகையில், ”ஒவ்வொரு வீட்டிலும் படித்துவிட்டு வேலையில்லாமல் ஆணும், பெண்ணும் துயரத்தோடு உள்ளனர். அதிக கல்லூரிகளும், கற்றவர்களும் நிறைந்த மாநிலம் நமது மாநிலம். ஆனால் இன்று படித்துவிட்டு வேலைக்கு திண்டாட வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் கூலி வேலைக்கு செல்லவேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக சுமார் ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

பெ. மணியரசன் பேட்டி

மேலும், உயர்நீதிமன்ற குமாஸ்தா பணி முதல் கிராம நிர்வாக அலுவலர் பணிக்குக்கூட வடமாநிலத்தில் இருந்து வந்து தேர்வு எழுதுகிறார்கள். இதை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் வேலை இல்லாத மக்களின் மனதிலுள்ள எண்ணங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டியிருக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details