தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சைத்துண்டு போட்டவர் எல்லாம் விவசாயி ஆக முடியாது - ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக! - வேளாண்மை சட்டம் குறித்து பாஜக

தஞ்சாவூர்: பச்சைத் துண்டு போட்டவர் எல்லாம் விவசாயி ஆக முடியாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாஜக விமர்சித்துள்ளது.

பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ்
பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ்

By

Published : Sep 30, 2020, 8:16 PM IST

மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனைத் திரும்ப பெறக்கோரியும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தஞ்சை கோட்ட விவசாய அணி சார்பில், தஞ்சாவூரில் வேளாண்மை சட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கலந்துகொண்டு இச்சட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மைகள் பல உண்டு, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை லாபகரமான முறையில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம். இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது பச்சைத் துண்டு அணிந்துள்ளார். பச்சைத் துண்டுபோட்டவர் எல்லாம் விவசாயி ஆக முடியாது. மேக்கப் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம், விளை நிலத்தில் விதை, உரம் போட முடியாது அதற்கு அனுபவம் தேவை.

ஸ்டாலின் போட்டோ சூட்டிங் செய்துகொண்டுவருகிறார். வேளாண் சட்டம் குறித்து ஸ்டாலின் சொல்வதில் எதுவும் உண்மையில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமனதுடன் தலைவணங்கி ஏற்கிறேன்' - எல்.கே. அத்வானி

ABOUT THE AUTHOR

...view details