தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். ஆசாரி வேலை பார்க்கும் இவர், பெருச்சநல்லூர் பகுதியில் உள்ள தனது அத்தை மகள் சுமித்ராவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி மாயவரம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு வயிறு வீங்கி இருந்ததால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர்.
பிறந்த ஒரு வார குழந்தைக்கு பாதரசம் கொடுத்த கொடுமை! - வயிறு வீக்கம்
தஞ்சாவூர் : பிறந்த ஒரு வார குழந்தைக்கு கை வைத்தியம் என பாதரசம் கொடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குழந்தையை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தையின் வயிற்றில் ஏதோ பொருள் இருப்பது போல் தெரிந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தைக்கு ஏதாவது கொடுக்கப்பட்டதா என சுமித்ரா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரித்துள்ளனர். விசாரித்ததில், சுமித்ராவின் தாய் குழந்தையின் வயிறு வீங்கி இருந்ததால் பாதரசம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சை இராசமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள பெண் சிசுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.