தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜவுளிக்கடை, நகைக்கடைகளை திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை

பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்க பேரமைப்பு தொடக்க நிகழ்வு நேற்று (ஜூலை 1) நடைபெற்றது. அதில் ஜவுளிக்கடை, நகைக்கடை ஆகியவற்றை நேரக்கட்டுப்பாடுடன் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் கோரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

By

Published : Jul 2, 2021, 9:03 AM IST

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வர்த்தக சங்கத்தின், பட்டுக்கோட்டை நகரக் கிளையின் தொடக்க நிகழ்வு நேற்று (ஜூலை 1) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கம்

வணிகர் சங்க பேரமைப்பின் தீர்மானங்கள்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா இக்கூட்டத்தில் பேசுகையில்,

  • பட்டுக்கோட்டையில் உள்ள 5,000 வணிக உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து ஏழை, எளிய மக்களுக்கு வைரஸ் தொற்று பேரிடர் நிவாரணப் பொருள்கள் வழங்குவது,
  • சாதி மதங்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக திறக்கப்படாமல் இருக்கும் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் ஆகியவற்றை நேரக்கட்டுப்பாடுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழநாடு வணிகர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details