மக்களவைத் தேர்தல் பரப்புரை நிறைவடைய இன்னும் ஓரிரு நாள்கள் உள்ள நிலையில், பெரிய கட்சிகள் முதல் புதிதாக தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சிகள் வரை உச்சகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அந்தந்த கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதிக்கு மட்டுமான தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
மீன்பிடி தொழிலை மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்து தருவேன்- தஞ்சை தமாகா வேட்பாளர் உறுதி - தமாகா
தஞ்சை: மீன்பிடி தொழிலை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவேன் என தஞ்சை தமாகா வேட்பாளர் நடராஜன் உறுதியளித்துள்ளார்.
தஞ்சை தமாகா வேட்பாளர் நடராஜன் பரப்புரை
அந்த வகையில், தஞ்சை மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் தமாகா வேட்பாளர் நடராஜன் தஞ்சை மாவட்ட கடற்கரை கிராமங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மீனவர்களிடம் பேசியவர், மீனவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், மீன்பிடி தொழிலை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.