தஞ்சாவூர்:மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் கடந்த 27ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் கோபால், தேரோடும் ராஜவீதிகளில் கழிவுநீர் சாக்கடைகளில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகவும் அதனால் பொது மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து மேயர் ராமநாதன் கடந்த 28ஆம் தேதி அந்தந்த வார்டுகளில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது பல இடங்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமலும் இருந்தது. இதையடுத்து பணிகளை வரும் மார்ச் மாதத்திற்குள் விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் மேயர் ராமநாதன் தெரிவித்தார்.