தஞ்சை மாவட்டக் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையிலான 37 மீன்பிடி தளங்களில், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இதில் கருவாடு மற்றும் கோழித் தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் சங்காய உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 5000 பேர் உள்ளனர்.
தொடர் சூறைக்காற்றால் கருவாடு உற்பத்தியாளர்கள் கவலை! - தஞ்சை
தஞ்சை: தொடர் சூறைக்காற்றால் கருவாடு ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மீன்பிடித் தொழில் சிறப்பாக இருந்தால் மட்டுமே அதை நம்பி இயங்கும் இவர்களது கருவாட்டுத் தொழிலும் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் கடந்த ஒரு மாதக் காலமாக கடலில் அதிவேக சூறைக் காற்றுடன் அலைகளும் அதிகளவு உயரத்தில் எழுந்து வருவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீன்பிடி தொழில் மட்டுமல்லாமல் அதைச் சார்ந்த இருக்கும் கருவாடு மற்றும் கோழித் தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் சங்காயம் ஆகிய தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.