தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை பம்புசெட்டு மூலம் 48 ஆயிரத்து 600 ஏக்கரில் கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறுவடை பணிகள் தற்போது நடந்துவருகின்றன. இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் உள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல், தனியாரிடம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 200வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் சாலையில் ஓரமாக நெல்லினை கொட்டிவைத்துக் காத்துக்கிடக்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.