நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் தினந்தோறும் பல இடங்களில் அரங்கேறிக் கொண்டே இருக்கும் நிலையில், பெண்கள் தனியாக வேலைக்குச் செல்லவோ... படிக்கச் செல்லவோ... மிகுந்த பயத்தை பெண்களிடையே இச்சமுதாயம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பிற்காக தஞ்சாவூர் தனியார் கல்லூரி மாணவிகளான நிகிதா, பவித்ரா, சரண்யா, நிரோத்தா ஆகியோர் அமிர்தகணேஷ் என்பவரின் உதவியோடு, ஆபத்துக் காலங்களில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தற்காப்பு நோக்கத்தில் செப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
ஆபத்துக் காலத்தில் அபாய ஒலி:
இந்தச் செப்பல் அணிந்துகொள்ளும் பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும்போது, தங்களின் கை அசைவுகள், உடல் அசைவுகளின் மூலம் இந்த டிவைஸ் செயல்படுகிறது என்றும், வன்கொடுமை செய்பவர்களின் மீது, இந்தச் ’செப்பல்' படும் பொழுது அவர்களின் மீது, செப்பலில் உள்ள 'எலெக்ட்ரிக் பவர்' வெளிப்படும் என்றனர்.
இதிலிருந்து வெளிப்படும் அபாய ஒலி 100 மீட்டர் வரை சுற்றுப்புறங்களில் உள்ள, மக்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து, தங்களைக் காப்பாற்ற உதவும் என மாணவிகள் கூறுகின்றனர்.