தஞ்சைyai அடுத்த திருவையாற்றில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழா ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் காவிரிக் கரையில் அமைந்துள்ள தியாகராஜர் சமாதி முன்பு கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தி வந்தனர்.
பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு அஞ்சலி! - திருவையாறு கீர்த்தனை
தஞ்சாவூர்: சத்குரு தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காவிரி கரையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடியும் புல்லாங்குழல், வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து இசை அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக மங்கள இசையான நாதஸ்வரம், புல்லாங்குழல் இசையும் அதை தொடர்ந்து கர்நாடக இசைக்கலைஞர்கள் அனைவரும் இணைந்து தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர். நிகழ்ச்சியில் சுதா ரகுநாதன், மகதி, ஓ.எஸ்.அருண் உள்ளிட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.