தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தொலைவிற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.