தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மாதவன் குடிகாட்டைச் சேர்ந்தவர் கனிமொழி(40). சிங்கப்பூரில் வசிக்கும் இவர் அங்கிருந்து கொண்டு கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று தேவையற்ற வன்முறையைத் தூண்டும் வகையில் மற்றொரு சமுதாய மக்களைத் தவறாக பேசினார். இது தொடர்பாக பாப்பாநாடு காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இவரின் விவரம் குறித்து நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.
மாற்று சமூகத்தினர் மீது அவதூறு: இளம்பெண் விமானநிலையத்தில் கைது! - Trichy airport
தஞ்சாவூர்: மாற்று சமூகத்தினரை அவதூறாக பேசிய சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் நாடு திரும்பியபோது திருச்சி விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
TNJ
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து இன்றிரவு நாடு திரும்பிய கனிமொழி திருச்சி விமான நிலையத்தில் பாப்பாநாடு காவல் ஆய்வாளரால் அதிரடியாக கைது செய்யப்ட்டார். வெளிநாட்டில் இருந்து கொண்டு தவறாகப் பேசி பிரச்னையை ஏற்படுத்துபவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.