தஞ்சாவூர்:ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூரில் இரவை பாசனத்திட்ட நீர் ஏற்றும் இயந்திரம் பழுதானதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
கல்லணை கால்வாய்க்கு உட்பட்ட கண்ணனூர் வாய்க்கால் மூலம் ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, பேரையூர், கீழக்குறிச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த கிராமங்கள் முழுவதும் மேடான பகுதி என்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 1969-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, ஒக்கநாடு கீழையூரில் இரவை பாசனத் திட்டத்தை துவக்கி வைத்தார்.