தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பதுக்கல்! - கள்ள நோட்டு பதுக்கல்

தஞ்சாவூர்: 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை, தஞ்சை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

four people arrested

By

Published : Oct 1, 2019, 11:42 PM IST

தஞ்சையில், கள்ளநோட்டுடன், ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையிலான தனிப்படையினர், தஞ்சை மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Thanjavur police station

சந்தேகத்திற்கிடமான முறையில், மன்னார்குடி சாலையில், நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் தஞ்சை மருத்துவக் கல்லுாரி சாலை கண்ணன் நகரைச் சேர்ந்த கதிரவன் என்பதும், அவர் கள்ள நோட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மன்னார்குடியைச் சேர்ந்த செந்தமிழன், கேரளாவை சேர்ந்த சாஜிகுமார், மன்னார்குடி மேலதெருவைச் சேர்ந்த அசோக் ஆகியோரைப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த 68 எண்ணிக்கையிலான, 500 ரூபாய் கள்ளநாட்டுக்களை கைப்பற்றினர்.

மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ள நோட்டு மாற்றுவதற்கு பின்னணியில் தெம்பன்குடிசை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் செயல்படுவதாக தெரியவந்தது. சரவணனை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: காவல்துறையும் ரவுடியும் சாலைநடுவில் கட்டி உருண்ட வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details