தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூலிழையில் உயிர் தப்பிய தம்பதியினர்... படபடக்க வைக்கும் வீடியோ - சிசிடிவி காட்சி

தஞ்சாவூர்: கும்பகோணம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனமும், எதிரே வந்த பேருந்தும் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

விபத்தின் சிசிடிவி காட்சிகள்

By

Published : Jul 3, 2019, 11:20 AM IST

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வழியாக சிதம்பரம் செல்லக்கூடிய தனியார் பேருந்து ஒன்று கோடி அம்மன் கோயில் பகுதியில் திடீரென திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பிரேக் அடித்தும், பேருந்து நிற்காமல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் - மனைவி இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தஞ்சை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விபத்தின் சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details