தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, 'விவசாயிகளுக்கு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு இலவச மின்சாரத்தை அளித்தது. ஆனால், அந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு சட்ட முன்வடிவு கொண்டுவந்துள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனால், நீட் தேர்விற்கு எதிராக இரண்டு முறை சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டும், இதுவரை நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது. அதேபோல்தான், இதுவும் மத்திய அரசால் நிறைவேற்றப்படும்.