தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கோடை விழா தொடக்கம்; 350க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு!

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கோடை விழா தொடங்கிய நிலையில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 22, 2023, 9:20 PM IST

தென்னகப் பண்பாட்டு மையத்தில் கோடை விழா

தஞ்சாவூர்: தென்னக பண்பாட்டு மையம் இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இம்மையம் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மையம், கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், தேவாரப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அதன் ஒருபகுதியாக, தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் கோடை விழா நேற்று (ஜூன் 21) மாலை தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் நீலமேகம், மேயர் ராமநாதன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

இந்த விழாவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா, கோவா, ஓடிசா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்டு, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் மாநில பாரம்பரிய நடனமான சித்தி தமால் (Siddi Dahamal) என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். மேலும், இவ்விழாவில் தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர், ரெட்கிராஸ் துணை தலைவர் முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

இவ்விழா, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாது அருகிலுள்ள பாபநாசம், திருச்சி பெல் வளாகம், திருச்சி கலைக்காவிரி கவின் கலைக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாதந்தோறும் வெள்ளிக்கிழமை வாராந்திர கலை விழாவும் நடைபெறுகின்றன.

தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் அருகில் உள்ள கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தஞ்சாவூர் நகர மற்றும் அருகில் உள்ள கிராமப்புற மக்களின் கலை ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த கலை நிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்தக் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையிட அனுமதி இலவசம், 5 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் Gotipuva - ஒடிசா, நாட்டுப்புற கலைகள் - தமிழ்நாடு, Raibense - மேற்கு வங்கம், Ummathaata Samai dance - கோவா ஆகிய மாநில பாரம்பரிய கலைகளை கலைஞர்கள் தினமும் நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Artemis Accords : நிலவு ஆராய்ச்சியில் இஸ்ரோ - நாசா கூட்டணி? வெள்ளை மாளிகை சூசகம்!

ABOUT THE AUTHOR

...view details