தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி நேரத்தில் 17 கி.மீ., ஸ்கேட்டிங் - சாதனை மாணவர்களுக்குப் பின் இருக்கும் சமூகப்பொறுப்பு! - உலக சாதனை படைத்த மாணவர்கள்

அலையாத்திக்காடுகள், கடல் பசு உள்ளிட்ட கடல் வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள், 1 மணி நேரத்தில் 17 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனைப் படைத்து நோபல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றனர்.

Etv Bharat ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்த மாணவர்கள்
Etv Bharat ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்த மாணவர்கள்

By

Published : May 7, 2023, 7:44 PM IST

ஸ்கேட்டிங்கில் உலக சாதனைப் படைத்த மாணவர்கள்

தஞ்சாவூர்:அலையாத்திக் காடுகள், கடல் பசு உள்ளிட்ட கடல் வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 4ஆம் வகுப்பிலிருந்து 9ஆம் வகுப்பு வரை படித்துவரும் அஸ்வந்த் கிருத்திக், ஹரிகிருஷ்ணா, நலன்ராஜன், நிரஞ்சன், பிரனேஷ், ராம்சாந்த், சங்கரயோகபாலன் ஆகிய 7 மாணவர்கள் அதிராம்பட்டினத்திலிருந்து சேதுபாபாவாசத்திரம் வரை சாலையில் 17 கி.மீ., தூரம் ரோலிங் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனைப் படைத்தனர்.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிருதிவிராஜ் சௌகான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்கேட்டிங் செய்த மாணவர்கள் 7 பேரையும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கைதட்டி உற்சாகமாக ஆரவாரப்படுத்தினர்.

இவர்களது சாதனையை நோபல் உலக சாதனை நிறுவனத்தின் சிஓ அரவிந்த் லெட்சுமிநாராயணன், வினோத் ஆகிய இரண்டு பேர் இரண்டு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்தனர். ஸ்கேட்டிங் செய்த 7 மாணவர்களும் 54 நிமிடங்களில் 15 கிலோ மீட்டர் சென்றவர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆரவாரத்தால் 6 நிமிடத்தில் இரண்டு கிலோ மீட்டர் கடந்து 17 கிலோ மீட்டர் என்ற இலக்கை சேதுபாவாசத்திரம் கடைத்தெருவில் நிறைவு செய்தனர்.

ஸ்கேட்டிங் உலக சாதனைப் படைத்த மாணவர்கள் ஸ்கேட்டிங் தொடங்கும் முன்பு, ’கடல் வளம் காப்போம்’ என்று முழக்கங்களை எழுப்பி ஸ்கேட்டிங்கைத் தொடங்கினர். முடிவில் 1 மணி நேரத்தில் 17 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து 7 மாணவர்கள் உலக சாதனைப் படைத்ததாக நோபல் உலக சாதனை நிறுவனத்தின் அலுவலர் அறிவித்து அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். ஸ்கேட்டிங் செய்து சாதனைப் படைத்த 7 மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:"ஏவிஎம் ஹெரிட்டேஜ்" அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details