தஞ்சாவூரில் திமுக விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி கரையில் விவசாயிகள் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய ஸ்டாலின், "டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக தடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
கருத்தரங்கத்தில் ஸ்டாலின் இது டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பிரச்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்னை. டெல்டா மாவட்டம் இயற்கையின் சதியால் மட்டுமல்ல, அரசியல் சதியால் காய்ந்துகொண்டிருக்கிறது. தண்ணீர் கேட்பது நமது உரிமை கொடுக்க வேண்டியது அவர்களது கடமை, ஆனால் கர்நாடக அரசு தொடர்ந்து கடமை தவறிவருகிறது. இதற்கு மத்திய அரசும் உறுதுணையாக உள்ளது.
கருத்தரங்கத்தில் பங்கேற்றவர்கள் காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் கேட்டோம், ஆணையம்தான் அமைத்தார்கள். அதையும் முறையாக பாஜக அரசு செயல்படுத்தவில்லை. அதை கேட்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடிய நிலையில் இல்லை. மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக இருக்கிறது. தண்ணீரை தடுப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மீது ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து ரசாயன தாக்குதல் நடத்தியது.
ஸ்டாலின் பங்கேற்ற கருத்தரங்கம் நாங்கள் வளர்ச்சியை தடுப்பவர்கள் அல்ல, இதனால் நாட்டின் மக்கள் பாதிக்கப் படக்கூடாது. மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நாடகத்தை நடத்திவருகிறது. மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கூறுகிறது. காவிரி டெல்டா படுகையை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாத்தால்தான் தமிழ்நாட்டை பாதுகாக்க முடியும். மத்திய அரசு கொண்டு வரக்கூடிய அனைத்து திட்டங்களும் மாநில அரசை கண்டிக்கக்கூடியது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கருத்தரங்கில் ஏற்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்திலும் ஒலிக்கும்" என்றார்.