தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர திமுக இளைஞரணி சார்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் 67ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவினர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே வெடிகளை வெடித்து பேருந்தில் சென்ற பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.
வெண்பா என பெயரிட்டு தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர்!
தஞ்சாவூர்: ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு திமுகவினர் தங்க மோதிரம் அணிவித்துக் கொண்டாடினர்.
ஸ்டாலின் பிறந்தநாள்
பின்பு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று இடையன் காடு கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்மணிக்கு இன்று அதிகாலையில் பிறந்த பெண் குழந்தைக்கு திமுகவினர் வெண்பா என்று பெயரிட்டு, தங்க மோதிரம் அன்பளிப்பாக அணிவித்தனர். இதில் ஏராளமான திமுக நகர நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.