தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடித்து ஐம்பொன், வெண்கலச் சிலைகள் கடத்தல்! - சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே

தஞ்சை: கரந்தை பூகுளம் ஜைன மத கோயிலில் சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடித்து 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த் ஒரு ஐம்பொன், 13 வெண்கலச் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

idols-theft-on-thanjavur
idols-theft-on-thanjavur

By

Published : Jan 19, 2020, 4:41 PM IST

தஞ்சை அருகேயுள்ள கரந்தை பூகுளம் பகுதியில் அமைந்துள்ளது ஜைன மத கோயில். 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில் பூசாரியாக மன்னார்குடியைச் சேர்ந்த ஜாலேந்திரன் என்பவர் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு ஜாலேந்திரன் மன்னார்குடி சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்பியபோது கோயிலிலிருந்த 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த் மூன்றடி உயர ஐம்பொன் ஆதுஸ்வரர் சிலை, சரஸ்வதி, ஜோலமணி, மகாவீரர் உள்ளிட்ட 13 வெண்கலச் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கரந்தை பூகுளம் ஜைன மத கோயில்

பின்னர் இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கு விரைந்த காவல் துறையினர் சிசிடிவி கேமராவை சோதனையிட்டதில் கொள்ளையர்கள் நூதனமாக சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடித்துவிட்டு சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொள்ளைர்கள் கோயிலைச் சுற்றி மிளகாய்ப் பொடியைத் தூவிச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திரா தங்க நகை வியாபாரி வழக்கு: 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details