தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிவேகமாக செல்லும் மணல் கொள்ளையர்களால் தொடரும் விபத்துக்கள்! - sand mafia

தஞ்சாவூர்: கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிவேகமாகச் செல்லும் மணல் கடத்தல் வாகனங்களால் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Tanjavore accident

By

Published : Apr 3, 2019, 10:20 PM IST

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கிழக்கு கடற்கரைச் சாலையானது பல்வேறு கனரக, சுற்றுலா பேருந்துகள் என 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்து பரப்பாக காணப்படும்.

இப்பகுதியில், பாயும் நசுவினி ஆறு, அக்னி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு உள்ளிட்ட காட்டாறுகளிலிருந்து தினமும் இரவு நேரங்களில், லாரி, சிறிய சரக்கு வாகனம், மாட்டு வண்டிகளைக் கொண்டு மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

இதனால், இயற்கை வளம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்று மணல் கொள்ளையர்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் செல்கின்றனர்.

இதனால், அப்பகுதியில் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதேபோன்று, சில வாரங்களுக்கு முன்பு மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறிய சரக்கு வாகனம் ஒன்று, மீன் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் மணலை கடத்திக் கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுமான பொருட்களை ஏற்றிவந்த மற்றொரு லாரி மீது மோதிய விபத்தில், அந்த லாரியின் ஓட்டுநர் தற்போது கவலைக்கிடமாக உள்ளார்.

இதுமட்டுமின்றி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோரும் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இயற்கை சீரழிவு மற்றும் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details