தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அம்மன்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(50). அவருக்கும், அவரது அண்ணன் மகன் முத்துமாணிக்கம்(37) என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்துவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் (மார்ச் 17) இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கைகலப்பு ஏற்பட்டவே முத்துமாணிக்கம் அறிவழகனை கத்தியால் குத்தியுள்ளார்.
குடும்பப் பிரச்னையில் சித்தப்பாவை கொன்ற மகன் கைது - Son arrested killing father thanjavur
தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக சித்தப்பாவை கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
thanjavur
அதில், அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின், தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் அங்கு விரைந்து அறிவழகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும் முத்துமாணிக்கம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க:மதுரையில் குடும்ப பிரச்னையால் மனைவி கொலை - கணவன் தப்பி ஓட்டம்