தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 ஆண்டுகளாக ஒன்றிய பெருந்தலைவர் பதவி ஒரு குடும்பத்திற்கு சொந்தம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை திமுக வென்றபோதும் மதுக்கூர் ஒன்றிதயத் தலைவர் பதவியை துரைசெந்தில் தக்கவைத்துள்ளார்.

துரைசெந்தில்
துரைசெந்தில்

By

Published : Jan 14, 2020, 5:11 PM IST

அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய குழு தலைவர் பதவியையும் திமுக வென்றது.

ஆனால் மதுக்கூர் ஒன்றியத்தை மட்டும் திமுகவால் வெல்ல முடியவில்லை. மதுக்கூர் ஒன்றியத்தை பொறுத்தவரை நேரடி தேர்தலாக இருந்தாலும் மறைமுகத் தேர்தலாக இருந்தாலும் துரைசெந்தில் என்பவரின் குடும்பத்தார்தான் வெற்றிபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது. கல்யாணஓடை என்ற கிராமத்தைச் சேர்ந்த துரைசெந்தில் மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவரது பெரியப்பா, மனைவி என இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் 20 வருடங்களாகவே ஒன்றிய பெருந்தலைவர் பதவியை வகித்துவருகின்றனர்.

இது குறித்து துரைசெந்தில், சாதி மத பாகுபாடு பார்க்காமல் தன்னிடம் வந்து உதவி கேட்பவர்கள் அனைவருக்கும் தம்மால் முடிந்தவரை உதவி செய்வதாகவும், அதனால் மக்கள் தன்மீதும் தனது குடும்பத்தார் மீதும் மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் துரை செந்தில். இதன்காரணமாகவே அதிமுக தலைமை தமக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை தந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

துரைசெந்தில் பேட்டி

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் கடைசி நிவாரண மனுக்கள் தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details