தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் உள்ளிட்ட கடைகள் தடை உத்தரவை மீறி இயங்கிவருவதாக அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நகராட்சி, வருவாய்த் துறை அலுவலர்கள் காவல் துறையினரின் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், ஐந்து கடைகள் தடை உத்தரவை மீறி செயல்பட்டது தெரியவந்தது.
கடைகளுக்கு சீல் வைக்கும் அலுவலர்கள் இதையடுத்து,அந்த ஐந்து கடைகளுக்கு அலுவலர்கள் பூட்டி சீல்வைத்தனர். இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை பகுதியில் தடை உத்தரவை மீறி இயங்கிவந்த கடைகளுக்கு அலுவலர்கள் பூட்டி சீல்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைகள் ஏதும் திறந்துவைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு சீல்