தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஆதனூர் கிராமத்தில் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வெள்ளி விழா காணும் நிலையில் உள்ளது. மேலும் இப்பள்ளியானது சுற்றுவட்டாரப் பகுதிகளில் தரமான பள்ளியாக விளங்கி வருகிறது.
இதன் காரணமாக இங்குள்ள அரசியல் தலைவர்கள் இந்த பள்ளியின் மீது அக்கறை கொண்டு மாணவர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, பள்ளி உபகரணங்கள் என நன்கொடையாக வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து வருகின்றனர்.
பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களை ஊக்குவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வரலாற்று தலைவர்களை நினைவு படுத்திய பள்ளி மாணவர்கள் மேலும், வரலாற்றுத் தலைவர்களை நினைவுப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் வேடமிட்டு அவர்களின் அறிவுரைகளையும், கருத்துரைகளையும் பதிவு செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
இதையும் படிங்க: கரூரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தற்காலிக நிறுத்தம்