தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடியில் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 45 மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். இவர்களுக்கு கல்வி கற்றுத்தர இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஆசிரியரின் உணவு பாத்திரங்களை பள்ளி மாணவ, மாணவியர் கழுவுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தன.
டிபன் பாக்ஸ் டீச்சரோடதுதான்... ஆனா சப்பிட்டது யாரா இருக்கும்? - பள்ளி மாணவிகள்
தஞ்சாவூர்: பள்ளி மாணவிகள் ஆசிரியரின் உணவு பாத்திரத்தை கழுவும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
child
இந்நிலையில் இன்று (ஜூன் 20) அப்பள்ளி கூடத்தை உதவி கல்வி அலுவலர் நடராஜன், சைல்டு லைன் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் கொண்டுவந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களே அப்பாத்திரங்களை கழுவி வைத்ததாக கூறப்படுகிறது. இங்கு ஆய்வு நடத்திய அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.