தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு ஆகிய ஆற்றில் பல ஆண்டுகளாக மணல் அள்ளப்பட்டு வந்தது. கொள்ளிடம் ஆற்றில், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் எழுந்த புகாரை தொடர்ந்து, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், இந்த தடையை மீறி ஒரு சில இடங்களில் அனுமதியின்று லாரிகள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
மணல் திருட்டு - நிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்! - Ground
தஞ்சாவூர்: பூதலூர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டா நிலத்தில் மணல் எடுத்து விற்பனை செய்வதைத் தடுக்க வலியுறுத்தி, பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, பூதலூர், பாபநாசம் வட்டாரங்களில் பட்டா நிலங்களில் குத்தகை என்ற பெயரில் மணல் அள்ள வருவாய்த்துறை மூன்று அடிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தி சிலர் பட்டா நிலங்களில், 15 அடிக்கும் மேலாக சென்று மணல் அள்ளி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆற்றுப்படுகையான பட்டா நிலத்தில் மணல் எடுத்து விற்பனை செய்வதைத் தடுக்க வலியுறுத்தி பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று நிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.