தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தாய் மொழியைப் போற்றி வளருங்கள்' - குடியரசுத் துணைத் தலைவர் உரை - வெங்கையா நாயுடு உரை

சத்குரு தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழாவினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீ தியாக பிரம்ம சபைத் தலைவருமான ஜிகே வாசன், தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சத்குரு தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழா, sadhguru thiyagarajan 173, குடியரசுத் துணைத் தலைவர் உரை, வெங்கையா நாயுடு உரை, vice president venkiah naidu speech
குடியரசுத் துணைத் தலைவர் உரை

By

Published : Jan 11, 2020, 10:45 PM IST

தஞ்சாவூர்: சத்குரு தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழாவினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கிவைத்து உரையாற்றினார்.

சத்குரு தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழாவினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீ தியாக பிரம்ம சபை தலைவருமான ஜிகே வாசன், தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “வளர்ச்சி திட்டங்களில் அரசியல் பார்க்கக் கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது கலாசாரம் மிகவும் பழமையானது. இந்திய கலச்சாரம் இன்னும் பழமை மாறால் உள்ளது. கலாசாரம் நமது வாழ்க்கை. நீங்கள் தமிழர் என்பதில் பெருமை கொள்ளுங்கள்; அதேநேரம் இந்தியன் என்பதிலும் பெருமை கொள்ளுங்கள்.

சத்குரு தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழா - குடியரசுத் துணைத் தலைவர் உரை

மதத்தின் பெயரால் யாரையும் துன்புறுத்தக் கூடாது. அனைத்து மக்களும் தாய் மொழிகளைப் போற்றி வளர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் வழி கல்வி வேண்டும். தமிழ்வழிக் கல்வி என்பது தவறில்லை. ஏனென்றால் நமது கலாசாரமும், மொழியும் ஒன்றிணைந்து பயணிப்பது ஆரோக்கியமானது” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details