தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சி.ஏ.ஏ.வை ரஜினியை வைத்து திசை திருப்ப ஆர்எஸ்எஸ், பாஜக முயற்சி...!’

தஞ்சாவூர்: தொடர் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தை ரஜினியை வைத்து திசை திருப்ப ஆர்எஸ்எஸ் - பாஜக முயற்சிப்பதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

velmurugan
velmurugan

By

Published : Jan 24, 2020, 11:19 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து அனைத்து ஜமாத்தார்கள், பொதுமக்கள் சார்பில் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பல லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களால் உருவாக்கப்பட்டது இந்த தேசம். தற்போது இஸ்லாமியர்களை ஒடுக்கும்விதமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டத்தை நடத்துவோம்.

வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்

1971ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை இப்பொழுது ரஜினி பேசிவருவது ஆர்எஸ்எஸ், பாஜக தூண்டுதலால் தற்போது தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களைத் திசைதிருப்பும் முயற்சி. ரஜினி பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் ஊதுகுழலாக இருந்துவருகிறார் என்பது இதன் மூலம் தெரிகின்றது.

மேலும் சமஸ்கிருதம் என்பது ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே பேசப்பட்டுவரும் மொழியாக உள்ளது. எனவே தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் கடுமையான போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு பெரியார் குறித்து ஒன்றும் தெரியாது -துரைமுருகன்!

ABOUT THE AUTHOR

...view details