திருவையாறு அடுத்த நடுக்கடையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசர் கருணாகரன், மேலும் இரண்டு சூப்பர்வைசர்கள், ஒன்பது விற்பனையாளர்கள் என 12 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இக்கடையானது வாழைத் தோட்டத்திற்கு நடுவில் அமைந்துள்ளது. சனிக்கிழமை மாலை கடையில் ரூ.35 லட்சத்து 14 ஆயிரத்து 310 மதிப்பிலான மதுபான பாட்டில்களை கடையில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலையில் கடை திறக்க சென்றபோது, கடையின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், கடையை சுற்றி இருந்த ஆறு சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தன. கடையின் ஷட்டரில் இருந்த மூன்று பூட்டுகளை உடைத்து உள்ளனர். ஆனால், ஒரு பூட்டை மட்டும் உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றுள்ளனர்.