தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஓய்வுபெற்ற அரசு அலுவலர் உயிரிழப்பு

தஞ்சை: திருவையாறு அருகே பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

retired-civil-servant-dies-after-attempting-suicide
retired-civil-servant-dies-after-attempting-suicide

By

Published : Feb 6, 2021, 6:42 AM IST

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூரைச் சேர்ந்தவர் துரைராஜ் (65). இவர் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு சுமதிஜாய்ஸ் என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் துரைராஜ் உடல்நிலை சரியில்லாததின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்துவந்தார். கடந்த ஜனவரி 29ஆம் தேதி சாத்தனூரில் உள்ள தனது வயலுக்குச் சென்ற துரைராஜ், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள், உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனளிக்காமல் துரைராஜ் நேற்று (பிப். 5) இறந்துவிட்டார்.

இது தொடர்பாக அவரது மனைவி சுமதிஜாய்ஸ் (53) கொடுத்த புகாரின்பேரில் மருவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாநகரில் 10 இருசக்கர வாகனங்கள் அடித்து உடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details