தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் கல்லூரி கல்வி இணை இயக்குநரை மாற்றக் கோரிக்கை

தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரை மாற்றவேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை செய்திகள்  கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை மாற்றக் கோரிக்கை  தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரை மாற்றக் கோரிக்கை  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்  பல்கலைக்கழகம்  பல்கலைக்கழக ஆசிரியர்  கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்  chennai news  chennai latest news  Thanjavur Regional College Associate Director of Education  College Associate Director of Education  Request to change Thanjavur Regional College Associate Director of Education  press meet  செய்தியாளர்கள் சந்திப்பு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ்

By

Published : Aug 6, 2021, 4:29 PM IST

சென்னை:தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், கல்லூரி கல்வி இயக்குநர் பாலச்சந்திரனை சந்தித்து, தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை மாற்றக் கோரி மனு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், “தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநராக பணியாற்றி வரும் உஷா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்.

அதிகரித்த லஞ்சம்

மேலும் உதவி பெறும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தருவதற்கும் கையூட்டு கேட்கிறார். உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதுடன், தனக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமெனவும் கட்டாயப்படுத்துகிறார்.

தஞ்சாவூர் மண்டலத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநராக உஷா நியமனம் செய்யப்பட்ட பிறகு கையூட்டு வழங்குவது அதிகரித்துள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் உஷாவை உடனடியாக பணி இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: 'ஆக. 14இல் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்'

ABOUT THE AUTHOR

...view details