தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ராமதாஸ் எந்த தயக்கமும் இல்லாமல் பொய் சொல்வார்'- முத்தரசன்

தஞ்சாவூர்: கட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ராமதாஸ் அவதூறுகளைப் பரப்பி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

cpi mutharasan

By

Published : Nov 8, 2019, 10:58 PM IST

இதுதொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,”கஜா புயலின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் இதுவரை மீளவில்லை. விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை.

மேலும் அவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கவில்லை. இதனால், அவர்கள் தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தற்போது விவசாயம் செய்து வருகிறார்கள். தீபாவளிப் பண்டிகை விற்பனைக்கு போதுமான மது பாட்டில்களை வாங்கி வைத்த அரசாங்கம், விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்கத்தவறிவிட்டது.

உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளுவர் சிலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பாஜக இதில் இரட்டை வேடம் போடுகிறது. வள்ளுவர் சாதி,மதம் என அனைத்தையும் கடந்தவர்.

அவரது சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால் அரசே அதற்கு முழு பொறுப்பு என்றார்.

மேலும் ராமதாஸ் பஞ்சமி நில விவகாரம் குறித்த கேள்விக்கு, ராமதாஸ் எந்த தயக்கமும் இல்லாமல் பொய் சொல்வார். அதனால் பட்டாளி மக்கள் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு வருகிறது. தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பஞ்சமி நிலம் போன்ற பிரச்னைகளை தவறாக பரப்பி வருகிறார். எனவே ராமதாஸ் இதுபோன்ற செயல்களைக் கைவிட வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்கள் ஆகிவிட்டது - துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details