தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2023, 9:47 AM IST

ETV Bharat / state

பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம்!

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.

Poondi Matha
பூண்டி மாதா

பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம்!

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒருபகுதி இங்கு வைக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று மாலை (6.5.23) கோலாகலமாகத் துவங்கியது.

முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி, பேண்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடி மரம் முன்பு அந்தமான் போர்ட் பிளேயர், மறைமாவட்ட ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடியை புனிதம் செய்து பிரமாண்ட கொடிமரத்தில் ஏற்றி வைத்தார்.

அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க என பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர். இந்த விழாவைத் தொடர்ந்து நவ நாட்களாக நடைபெற்று தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் சர்ச் அதிபரும் பங்கு குருவுமான சாம்சங், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், பங்கு குருக்கள் அன்புராஜ், தாமஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ‘பின்னோக்கி ஸ்கேட்டிங்’: உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சாதனை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details