தஞ்சாவூர்:கும்பகோணம், முருக்கங்குடியை சேர்ந்தவர் ராமதாஸ். மர வியாபாரியான இவர், கடந்த 17ஆம் தேதி இரவு நாச்சியார்கோவில் அருகே சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது ரூ.20 ஆயிரத்து 400 பணம் கத்தையாக கிடப்பதை பார்த்துள்ளார். அதனை எடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார்.
பின்னர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்ரேட்டராக உள்ள தனது நண்பர் பாஸ்கரிடம் பணம் சாலையில் கிடந்தது குறித்தும், அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எவ்வளவு பணம், எந்த இடத்தில் கிடந்தது என்பது குறித்த தகவல்களை வாட்ஸ்ப் குழுக்களில் அவர் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த உப்பிலி அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தன்னுடைய பணம் என்றும், கடந்த 17ஆம் தேதி சாலையில் தவற விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.