தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’போடு கடைக்கு பூட்ட’ - சுகாதார அலுவலரின் செயலால் மக்கள் அதிர்ச்சி - தஞ்சாவூர் அண்மைச் செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறி விளையாடிய மகனை காய்கறிக்கடைக்காரர் காட்டிக் கொடுத்ததாக, பணியாள்களை கடைக்குள்ளேயே வைத்து சீல்வைத்த சுகாதார அலுவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டும் சுகாதார அலுவலர் தொடர்பான காணொளி.
ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டும் சுகாதார அலுவலர் தொடர்பான காணொளி.

By

Published : Jun 7, 2021, 7:47 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரோனா சிகிச்சை மையத்திற்கு அருகில், சில இளைஞர்கள் ஊரடங்கு விதிகளை மீறி விளையாடுவதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விளையாடிய சிறுவர்களை எச்சரித்த காவல் துறையினர், அவர்களின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல்செய்தனர்.

அதில் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் சுகாதார அலுவலர் ஆரோக்கியத்தின், மகனின் இருசக்கர வாகனமும் அடங்கும். இந்நிலையில் காய்கறிக் கடை வைத்திருக்கும் பக்ருதீனே தனது மகனைக் காட்டிக் கொடுத்ததாக அவர் எண்ணியிருக்கிறார்.

ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டிய சுகாதார அலுவலர் தொடர்பான காணொலி

இதனைத் தொடர்ந்து அவரது காய்கறிக் கடைக்குச் சென்று, தளர்வுகளை மீறி வியாபாரம் செய்வதாக கடையில் பணிபுரிந்துகொண்டிருந்த இரண்டு நபர்களை உள்ளே வைத்து பூட்டிச் சீல்வைத்தார்.

இதனால் கடை உரிமையாளர் பக்ருதீனுக்கும், சுகாதார அலுவலர் ஆரோக்கியத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகராட்சி சுகாதார அலுவலரின் செயல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : '9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!

ABOUT THE AUTHOR

...view details