தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குடிதாங்கியில் 50 ஆண்டுகளான பழமையான மாணிக்க நாச்சியார் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலை அப்பகுதி மக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா சார்பில் சுமார் 25லட்சம் மதிப்பில் புதுப்பிப்பதற்காக அடிக்கல் நாட்டசென்ற ஊர்மக்களையும், இந்து சேனா நிர்வாகிகளையும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜா தடுத்துள்ளார்.
கோயிலை புதுப்பிக்க எதிர்ப்பு - காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: குடிதாங்கி அருகே 50 ஆண்டுகள் பழமையான கோயிலை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவரை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா நிர்வாகிகள் சுவாமிமலை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அக்கோவில் இருக்கும் இடம் தனக்கு சொந்தமான இடம் என்றும், போலி சான்றிதழ் வாங்கிக்கொண்டு புதுப்பிக்க விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது அப்பகுதி மக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து, சுவாமிமலை காவல்நிலையத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால் காவல்துறை சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சுவாமிமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை ஆய்வாளர் நாகலட்சுமி இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.