தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார், பைக் மோதி விபத்து - சிகிச்சைக்கு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழப்பு - Car motorbike accident

தஞ்சாவூர் : திருவையாறு அருகே கார் - பைக் மோதிய விபத்தில் ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திருவையாறு அருகே கார் பைக் மோதியதில் ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
திருவையாறு அருகே கார் பைக் மோதியதில் ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

By

Published : Sep 6, 2020, 11:47 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் ,திருவையாறு அடுத்த கீழத் திருப்பந்துருத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 27). கூலி வேலை செய்துவரும் இவருக்கு திருமணமாகி நிரோஷா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அன்பழகன் மோட்டார் சைக்கிளில் கீழத் திருப்பந்துருத்தியிலிருந்து கண்டியூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கண்டியூரில் இருந்து கீழ்த் திருப்பந்துருத்தி நோக்கி வந்த ஆம்னி கார், எதிர்பாராதவிதமாக கள்ளுக்கடை பாதை அருகே அன்பழகனின் மோட்டார் சைக்கிளுடன் மோதியது.

இதில் அன்பழகன் பலத்த காயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சைக்காக சேர்ப்பதற்கு பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்விபத்து குறித்து அன்பழகனின் மனைவி நிரோஷா, நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் நடுக்காவேரி காவல் ஆய்வாளர் ஜெகதீசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details