தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்றிரவு (செப்.24) சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய சூட்கேசுடன் முதியவர் ஒருவர் சுற்றியுள்ளார். அப்போது, ரோந்து பணியில் இருந்த காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் சென்னைக்குச் செல்வதாக கூறியுள்ளார்.
பின்னர், அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனையிட்டபோது, அதில் எட்டு சந்தன மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தஞ்சை நாஞ்சிக்கோட்டையைச் சேர்நத ராம்குமார் (65) என்பது தெரிய வந்துள்ளது.
அவர் பாபநாசம் தாலுக்காவில் உள்ள பட்டா நிலத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி அதனை சென்னைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பட்டா நிலத்தில் இருந்து சந்தனக் கட்டைகளை கடத்துவது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:காங்கிரஸ் கொடி கம்பம் அவமதிப்பு! மது பாட்டிலில் சிறுநீர் கலந்து ஏற்றிய கொடூரம்! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!