தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் சிலை திருட்டில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது; 6 சிலைகள் மீட்பு

தஞ்சை பட்டுக்கோட்டையில் கோயில் சிலை திருட்டில் ஈடுபட்ட 9 நபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூரில் சிலை திருட்டில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது
தஞ்சாவூரில் சிலை திருட்டில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது

By

Published : Dec 23, 2022, 9:38 AM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், விளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் தொடர் சிலை கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரித்விராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி பட்டுக்கோட்டை உதவி ஆய்வாளர் தனிப்பிரிவு சந்திரசேகரன் தலைமையிலான காவல்துறை தனிப்படையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின், அடிப்படையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 9 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு. ஆறு சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:செக்கானூரணி அருகே கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்

ABOUT THE AUTHOR

...view details