தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

New Year 2023: ராஜ அலங்காரத்தில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஒப்பிலியப்பன் காட்சி - தஞ்சாவூர் நியூஸ்

2023 புத்தாண்டையொட்டி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் (Oppiliappan Temple, Tanjavur) உற்சவர் பெருமாள் பொன்னப்பர் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 1, 2023, 6:44 PM IST

New Year 2023: ராஜ அலங்காரத்தில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஒப்பிலியப்பன் காட்சி

தஞ்சாவூர்: 2023 புத்தாண்டையொட்டி,ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று (ஜன.1) அதிகாலை 3.40 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதத்திற்கு பிறகு 4 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்காண பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களில் சிறப்புடைய தலமாகவும் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குவது, கும்பகோணம் அருகே உள்ள 'தென்னக திருப்பதி, திருவிண்ணகர்' என போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோயில் (Oppiliappan Temple, Tanjavur). இங்கு அமைந்துள்ள கோயிலில் மூலவர் வெங்கடாஜலபதி சுவாமியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தை பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர்.

திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை போன்றே இத்தலத்து இறைவனும் வரப்பிரசாதியாக, வெங்கடாசலபதி என்ற திருப்பெயருடனும், புராணங்களில் ஸ்ரீனிவாசன் எனும் திருநாமம் கொண்டும் மூலவர் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர்.

மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் உள்ளார். எப்போதுமே இங்கு பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே துலாபாரம் உண்டு என்பது சிறப்பு.

இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில், மூலவர் வெங்கடாஜலபதி சுவாமி குளிர் காலத்திற்கு ஏற்ற வெல்வெட் அங்கியில், இராஜ அலங்காரத்திலும், உற்சவர் பெருமாள் பொன்னப்பர், ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details