இது குறித்து வாகன ஓட்டிகள் சார்பில் தெரிவிக்கையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி ஆகிய இடங்களில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் கலப்படம் செய்த பெட்ரோல் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் அளவையும் குறைத்து நிரப்புவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பெட்ரோல் முறைகேடு குறித்து நடவடிக்கை தேவை- வாகன ஓட்டிகள்
தஞ்சை: பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள்
மேலும் இது தொடர்பாக பெட்ரோல் சேமிப்பு நிலைய உரிமையாளர்களிடம் முறையிட்டால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் சேமிப்பு நிலைய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.