தஞ்சை செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியதாவது:
எட்டு வழி சாலை தீர்ப்பு தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்: நல்லகண்ணு - Delta
தஞ்சாவூர்: சென்னை-சேலம் எட்டு வழி சாலை குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணு
"சேலம் எட்டு வழி சாலை குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
டெல்டா மாவட்ட கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தத் தேவையில்லை என அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தை மக்களின் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது" என்றார்.